Wednesday, January 31, 2007

வந்த வசந்தம்...

கைவிட்டுச் சென்ற வசந்தம்
கை சேர்ந்ததிங்கே இன்று

மலர்கள் மலர்ந்தன புதிதாய்
மாருதம் இசைத்தது புதுகானம்
இலைகள் அசைந்தசைந்து ரசித்தன
பறவைகள் நின்று வெட்கிச் சென்றன

பாதையெங்கும்
கொட்டிக் கிடக்குது பருவராகம்
வானெங்கிலும்
மேகங்களின் இன்ப நடனம்

வந்த வசந்தம்
வாரி வழங்குது
வசந்தகால காட்சியினை

2 Comments:

Anonymous Anonymous said...

Has the spring started already in Tamil Nadu? I thought TN has only 2 seasons - Summer and Severe Summer :-)). Or is this an advance welcome poetry. :-))

Wednesday, January 31, 2007 5:44:00 AM  
Blogger மதுமிதா said...

அன்புலகில் வசந்த வரவிது அனானி::-)

Tuesday, July 17, 2007 11:51:00 PM  

Post a Comment

<< Home