எங்கெங்கிலும் நீ ...
எனை அழைத்துக் கொண்டு
விநாடியும் உனை
விலக விடாது
விரும்பிப் பற்றிக்கொண்டேன்
உயிரைக் காக்கும் ஆவலாய்
விடியல் சொல்கிறது
விழித்தபடியான கனவென்று
வீழச் செய்தது உற்சாகம் வடிய
உலகைத் துறந்த பின்னும்
உன்னைத் துறக்க இயலவில்லை
உயிரினும் இனியதாய்
இனித்துக் கிடக்கிறது
உன் நினைவு
கண்ணனின் மீராவாய்
உன் பெயரை
உச்சரித்து உச்சரித்து
சிவபாராயணம் நடக்க
செவி மூடிய நீயோ
அவளின் கைகளில்
உனைக் காக்கும்
அவளை வாழ்த்துகிறேன்
நான் தரா
நிம்மதியினைத் தருவாய் நீ
நித்திராதேவியென
என்ன செய்தாயடா
என்ன செய்வேனடா
4 Comments:
கவிதை நன்று. கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது ஏனோ...
///உனைக் காக்கும்
அவளை வாழ்த்துகிறேன்
நான் தரா
நிம்மதியினைத் தருவாய் நீ
நித்திராதேவியென///
அவள் = நித்திராதேவி = தூக்கம்
இப்போது குழப்பம் தீர்ந்ததா
மஞ்சூர் ராசா:-)
தூங்குமுஞ்சி காதலன்... :))))
இல்லை. தொனிக்கிறதா பாருங்கள்
தூங்காததால், தூங்கவேண்டுமே என்ற அக்கறை:-) tbcd
Post a Comment
<< Home