வேண்டியதைத் தந்த நீ...
உயிர்ப்பொழுதில்
உணர்வு ததும்ப நெருங்கினாய்
மரக்கட்டையை
மலரச் செய்தாய்
மனமறிந்து நடந்தாய்
செய்வாயா எனும்
ஒற்றைச் சொல்லை
ஒரு நாள் உச்சரிக்க
என்ன கேட்பாயெனும்
கேள்வியே இன்றி
ஒத்துக்கொண்ட மனம்
அறியச் செய்தது
அன்பை மனதை
நிழலாய் நின்று
நிஜம் உணர்த்தினாய்
வேண்டியதைத் தந்தாய்
வேண்டாததையும்
வேண்டியதாய் தந்தாய்
வேறு சிந்தையில்லை
உன்னைத் தவிர
வேறு சிந்தையில்லை
நீயன்றி வேறு அன்பில்லை
தினமும் உன் அன்பில்
நனைந்து வாழ்கிறேன்
உன்னை மட்டும் வேண்டி
நீயோ விதியாய் சிரிக்கிறாய்
தீண்ட இயலா தொலைவில் நின்று
2 Comments:
//*நீயோ விதியாய் சிரிக்கிறாய்
தீண்ட இயலா தொலைவில் நின்று*//
நல்ல வரிகள்...
நன்றி tbcd:-)
Post a Comment
<< Home