Wednesday, July 11, 2007

தேடும் கணங்கள்...

உலகெங்கிலும்
வெளியிலும் தேடுகிறேன்
என்னுள் இருக்கும்
உன்னை

தேடலின் கணங்கள்
அதி அற்புதமானவை
சில சமயங்களில்
இனிமையானவை
கண்ணில் நீர் தருபவை
மலர் அள்ளித்தருபவை
தீயை வளர்ப்பவை
எதிரெதிரான உணர்வினை
மாற்றி மாற்றித் தருபவை

இன்னும் இன்னும்
உயிர்ப்புடன் வாழ்வின்
இரகசியத்தை
அறியச் செய்பவை

உன்னை வாழ்த்தும்
ஒவ்வொரு கணமும்
தேடலின் சுரங்கத்துள்
தூக்கி எறிந்துவிடுகிறது
நினைவில் மூழ்கடித்து...

2 Comments:

Blogger PKS said...

Enna Aachi? Ellam ore pulambal kavithaikalaa iruku. Kaathal kavithai enraaley pulambal, sogam nu ninaikara stero-typela vizhunthuteengalaa? Come out of these and write joyful kaathal kavithaikal that exhibit your poetic language and depth. - PK Sivakumar

Wednesday, July 11, 2007 1:51:00 PM  
Blogger மதுமிதா said...

மத்த கவிதைகளைச் சொல்றீங்களா
இதைச் சொல்றீங்களா பிகேஎஸ்

தேடும் கணங்கள் அப்படி இல்லைன்னு நினைக்கிறேன்:-)

உங்க கண்ணில் மட்டும் சரியா இந்த கவிதைகள் வந்து எப்படி மாட்டிக்குது தெரியலியே:-)

ஆலோசனைக்கு நன்றி சிவா...ஜி:-)

இனி வரும் நாட்களில் கவிதை எழுதினால் எப்படி வருகிறதென பார்க்கலாம்.

Wednesday, July 11, 2007 8:53:00 PM  

Post a Comment

<< Home