Wednesday, August 29, 2007

வெம்மை சொல்லும் உண்மை...

குளிர் தணிக்க சேர்த்தணைப்பாய்
சேர்த்தணைக்கக் கிடைக்கும் வெம்மை
வெம்மை சொல்லும் தேடிடும் உண்மை
உண்மை கண்டு நெகிழும் நெஞ்சு
நெஞ்சு உணரும் காதலில் நிறையும்

நிறையும் இதழைத் தீண்டும் அழுத்தம்
அழுத்தம் அழுந்த இசைக்கும் இசை
இசையோ இனிக்கும் முத்த சுவை
சுவையோ ஈர்த்து வேண்டும் குளிரை
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்

1 Comments:

Blogger cheena (சீனா) said...

அனுபவித்து எழுதிய கவிதை - சுக அனுபவம் - வாழ்க - தொடர்க

Saturday, October 13, 2007 6:40:00 PM  

Post a Comment

<< Home