அன்பும் கூட...
நீண்ட பொழுதுகள்
நேசிக்கும் உத்வேகம் வளர்க்கும்
வளரும் பிறையாய்
பீறிட்டெழும் உணர்வுக்கான
வடிகாலில்லாத பொழுதில்
வெடித்தெழும் கோபரூபம்கொண்டு
அன்பும்கூட
நேசம் மறுக்கப்பட்டபோதும்
நேசம் பொங்கித் ததும்பும்
தீராத தாபத்துடன்
வார்த்தையில்லா கணங்கள்
வாஞ்சையாய் வெளிப்பட்டாலும்
வேறாய் புரிந்து கொள்ளப்படும்
விதையொன்றிட
சுரையொன்று முளைக்காதென
அறியும் திறனிருந்தாலும்
உறங்கா இரவுகள்
உயிர்ப்பித்த உணர்வுகள்
உன்னதமானவை
மறுதலிக்கப்பட்ட காதல்
என் செய்யும்
காதலில் கசிந்துருகுவதைத் தவிர...
2 Comments:
//விதையன்றிட// = விதையொன்றிட ??
// வார்த்தையில்லா கணங்கள்
வாஞ்சையாய் வெளிப்பட்டாலும்
வேறாய் புரிந்து கொள்ளப்படும்
விதையன்றிட
சுரையன்று முளைக்காதென
அறியும் திறனிருந்தாலும்
//
இந்தப் பத்தி நெருடுகிறது. இது இல்லாமல் கவிதை நன்றாக இருக்கிறது. - பி.கே. சிவகுமார்
ya typing error
font problem
thanks for the comment PKS
Post a Comment
<< Home