மரித்தாலும் மறவேனே......
தானாக வந்தேனென
தயை மறந்தனையோ
கை தவறச் செல்தல் தகுமோ
வீணுலகில்
விண்ணுலகாய் வந்த செல்வமே
விடாது பற்றிக்கொண்டே
வியந்த மனதை
விட்டுச் செல்தல் முறையோ
விளையாட்டல்லவே வாழ்க்கை
வீழச்செய்து வேடிக்கை காண்பதோ
விதியோ விதியின் சதியோ
காலத்தின் வேட்கையோ
மறக்க நினைந்து
மந்தகாசப் புன்னகையோ
மறுப்பதான நடிப்போ
மறுப்பாயோ மறப்பாயோ
மறவேனே மறவேனே
மரித்தாலும் மறவேனே
3 Comments:
அது என்ன மரித்தாலும் மறவேனே? செத்தாலும் எம் மூஞ்சில முழிக்காதே என்பதைப் போல :-)
:-)))
காதல் மனநிலை ஒரு கிறுக்கத்தனம் செய்யும் உஷா
ஜன்மங்களில் நம்பிக்கையில்லா விட்டாலும், ஜென்மாந்திரம் தொடரும் பந்தம் என்று சொல்லும்.
ஏன்னா விடமுடியாது தவிக்கும். அந்த தவிப்பிலேயே சிக்கிக் கிடக்கும். திருத்தமுடியாத கேஸ¤:-)
அதுதான் மரித்தாலும் மறவேனே:-)
Post a Comment
<< Home