Thursday, September 20, 2007

காட்டுத்தீயாய்...

காட்டுத்தீயாய்
தகிக்கும் காதலை
காதலைக் கொண்டே
அணைக்கவியலும்

காதல்
காற்றைப் போல

மெய்யானால்
பிரிவில் வளர்த்தெடுக்கும்
காட்டுத்தீயை வளர்ப்பதாய்

இல்லையேல்

அணைத்துவிடும்
மெழுகின் ஒளியை அணைப்பதாய்

4 Comments:

Blogger அ. பசுபதி (தேவமைந்தன்) said...

'kaaRRaip pool meyyaanaal'-'mey'kku udal enRa poruLum uNduthaanee?
kalapathy-il thaangkaLitturindha viLakkatthukku nanRi.
Devamaindhan

Friday, September 21, 2007 11:18:00 PM  
Blogger மதுமிதா said...

அதனால்தான் 'உண்மையானால்' என இல்லாது மெய்யானால் என எழுதப்பட்டது.

காதல் உண்மையானால், பிரிவு காதலை வளர்க்கும், காற்று காட்டுத்தீயை வளர்ப்பது போல‌;

காதல் பொய்யானால், பிரிவு காதலை அழித்துவிடும், காற்று மெழுகின் ஒளியினை அழித்து விடுவது போல‌.

'காதல் காற்றைப் போன்றது' என்பதை 'காதல் காற்றைப் போல' என கொடுத்துள்ளேன்.

Saturday, September 22, 2007 4:02:00 AM  
Blogger அ. பசுபதி (தேவமைந்தன்) said...

அப்பாடா!
என்ன பொருத்தமான விளக்கம்..
நீங்களே விமர்சகராக இருக்கலாம்.
நான் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
-தேவமைந்தன்

Monday, October 01, 2007 6:35:00 AM  
Blogger மதுமிதா said...

இந்தப் பதிவுக்கு நீங்கள் விமர்சனம் செய்ய விரும்பினால் யாரால் தடுக்க முடியும்:-)

நான் விளக்கம் கொஞ்சம் கொடுத்தேன் அவ்வளவுதான்:-)

Monday, October 01, 2007 7:31:00 AM  

Post a Comment

<< Home