Saturday, October 13, 2007

நீள்கிறது இரவு...

நீள்கிறது இரவு
நீயின்றி சுடுகிறது தீயாய்

காயும் நில‌வும்
காற்றும்கூட‌ த‌கிக்கிற‌து
உன்நினைவினை
அலைய‌லையாய் எழுப்பி

க‌ட‌லினும் பெரிதோ
ம‌ல‌ரினும் அழ‌கோ
கானினும் அட‌ர்வோ
தேனினும் இனிதோ

தீண்டவேண்டுமெனும்
தீரா விருப்பினை
அள்ளி அள்ளி
அளிக்கும்காத‌ல்

32 Comments:

Blogger ரசிகன் said...

//நீள்கிறது இரவு
நீயின்றி சுடுகிறது தீயாய் //

இந்த ரெண்டே வரிகள் போதும்,பிரிவாராமையை விளக்க..நல்லாயிருக்கு..

Thursday, October 25, 2007 5:21:00 AM  
Blogger cheena (சீனா) said...

பிரிவு தவிர்க்க முடியாதது எனில் அதன் பின் இணையும் போது ஏற்படும் இன்பம் இணையற்றது.

//க‌ட‌லினும் பெரிதோ
ம‌ல‌ரினும் அழ‌கோ
கானினும் அட‌ர்வோ
தேனினும் இனிதோ

தீண்டவேண்டுமெனும்
தீரா விருப்பினை
அள்ளி அள்ளி
அளிக்கும்காத‌ல்
//

காதல் இவற்றுக்கு எல்லாம் மேலானது. இன்பத்தை அள்ளித் தருவது. தீண்டத் தீண்ட இன்பம். விருப்பு எப்போதுமே தீராதது

Thursday, October 25, 2007 3:20:00 PM  
Blogger மதுமிதா said...

பிரிவாற்றாமை என்பது வார்த்தைகளில் வடிக்க இயலா வேதனையைத் தரும் ரசிகன்:-)

இந்த வரிகளால் வேதனையிலிருந்து வெளிவர முயன்றிருக்கிறேன். முடியவில்லை:-)

*****

நன்றி சீனா
மயிலிறகால் மருந்தளித்தாற்போல் :-)

Friday, October 26, 2007 3:25:00 AM  
Blogger CVR said...

Great poems all!!
Kudos! :-)

Friday, October 26, 2007 5:11:00 AM  
Blogger மதுமிதா said...

நன்றி CVR

Saturday, November 24, 2007 8:54:00 AM  
Blogger ஆடுமாடு said...

மேடம், மஹாகவி பர்த்ருஹரியின்'சுபாஷிதம்' எழுதிய மதுமிதா நீங்கள் தானா?

Sunday, December 23, 2007 10:32:00 PM  
Blogger மதுமிதா said...

:‍-)

ஏன் கேட்கிறீர்கள் ஆடுமாடு. அதையும் எழுதிவிட்டு இதுவும் எழுத முடியுமா என்றா?

எனில் ஆமாம்.

மஹாகவி பர்த்ருஹரி எழுதிய 'சுபாஷிதம்' நூலை சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

Sunday, December 23, 2007 11:00:00 PM  
Blogger ஆடுமாடு said...

இல்லை. நீங்கள்தானா என்ற சந்தேகத்தின் பெயரில்தான் கேட்டேன்.

சமீபத்தில்தான் அதை படித்தேன். நீங்கள் செய்திருப்பது நல்ல பணி. புத்தகம் பற்றி என் பதிவில் விரைவில் ஒரு கட்டுரை எழுத இருக்கிறேன்.

நன்றி.

Sunday, December 23, 2007 11:37:00 PM  
Blogger மதுமிதா said...

நன்றி ஆடுமாடு.

Monday, December 24, 2007 1:46:00 AM  
Blogger Ponchandar said...

உங்கள் கவிதைகள் படித்தேன்....செங்கோட்டையிலா பள்ளிப் பருவத்தை கழித்தீர்கள் ! !

Friday, January 25, 2008 3:55:00 AM  
Blogger Ponchandar said...

சென்ற அக்டோபருக்கு அப்புறம் ஏன் எழுதவில்லை ! !

Friday, January 25, 2008 3:56:00 AM  
Blogger மதுமிதா said...

எட்டாம் வகுப்பு வரை தென்காசியில் படித்தேன் கோல்டன்மூன்.

Sunday, July 13, 2008 8:24:00 PM  
Blogger மதுமிதா said...

காதல்தோல்வி என்று எழுதக்கூடாதென்பதால் கவிதை எழுதவில்லை கோல்டன்மூன்.

காதலர்கள் தோற்கலாம். காதல் தோற்காது.

Sunday, July 13, 2008 8:27:00 PM  
Blogger மே. இசக்கிமுத்து said...

ஆகா காதல் வந்துச்சே!!!

Thursday, July 24, 2008 3:12:00 AM  
Blogger மதுமிதா said...

ஆமாம். வந்தாச்சே:-)

யாருக்கு இசக்கிமுத்து?????

Thursday, July 24, 2008 3:52:00 AM  
Blogger Deepa said...

ந‌ல்ல‌ க‌விதை...

:-) ஆடுமாடு ம‌ற்றும் உங்க‌ள் வார்த்தைப் ப‌ரிமாற்ற‌ங்க‌ள் வாய் விட்டு சிரிக்க‌ வைத்த‌ன‌!


த‌மிழில் எழுத‌ உத‌விய‌ உங‌ளுக்கு ந‌ன்றி ம‌துமிதா!

Monday, October 20, 2008 10:37:00 AM  
Blogger மதுமிதா said...

தீபா ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது இந்த நீங்கா இன்பம் பதிவுக்கு வந்து எழுதி. காற்றுவெளி பதிவில் ம‌ட்டுமே இப்போது எழுதுகிறேன்.

நீங்கள்தான் நீதிசதகம் பாடல்களை வாங்கி அப்பாவிடம் கொடுத்தது தீபா:) அப்பா நலம்தானே?

ஆடுமாடு இன்னும் பர்த்ருஹரி சுபாஷிதம் குறித்து தனது பதிவில் கட்டுரை எழுதவில்லை போலிருக்கிறது:)

Monday, October 20, 2008 11:48:00 AM  
Blogger Vishnu... said...

நல்ல கவிதை ...அருமை ...

நன்றிகளுடன் ...

விஷ்ணு

Wednesday, October 22, 2008 6:34:00 AM  
Blogger மதுமிதா said...

நன்றி விஷ்ணு.

ஆனால் ஒன்றை மட்டும் வாசித்துவிட்டுப் போய்விட்டீர்கள் போலிருக்கிறதே விஷ்ணு.

இதில் நூறுக்கு மேற்பட்ட கவிதைகள்

(உளறல்கள்:), பிதற்றல்கள்:), புலம்பல்கள்:) )

இருக்கின்றனவே.

Tuesday, October 28, 2008 9:51:00 PM  
Blogger Vishnu... said...

//மதுமிதா said...
நன்றி விஷ்ணு.

ஆனால் ஒன்றை மட்டும் வாசித்துவிட்டுப் போய்விட்டீர்கள் போலிருக்கிறதே விஷ்ணு.

இதில் நூறுக்கு மேற்பட்ட கவிதைகள்

(உளறல்கள்:), பிதற்றல்கள்:), புலம்பல்கள்:) )

இருக்கின்றனவே.//

கண்டிப்பாக ..மீண்டும் வருவேன் ..
உங்கள் அனைத்துகவிதைகளையும் படிப்பேன் ..

:-))))



என்றும் இனிய தோழன்
விஷ்ணு

Tuesday, October 28, 2008 10:00:00 PM  
Blogger மதுமிதா said...

அப்போ காற்றுவெளி வாசிக்கிறதில்லை
யா தோழர் விஷ்ணு:)

http://madhumithaa.blogspot.com/

Tuesday, October 28, 2008 10:09:00 PM  
Blogger Vishnu... said...

//மதுமிதா said...
அப்போ காற்றுவெளி வாசிக்கிறதில்லை
யா தோழர் விஷ்ணு:)//

கண்டிப்பாக அதையும் வாசிக்கிறேன் ...
நேரம் கிடைக்கையில் ...

நீங்களும் நேரம் கிடைக்கையில் எனது வலை தளங்களும் ஒரு நடை வாருங்களேன் ..

Tuesday, October 28, 2008 10:17:00 PM  
Blogger மதுமிதா said...

சரி. நிச்சயமா வருகிறேன் விஷ்ணு.

Wednesday, October 29, 2008 12:11:00 AM  
Blogger Rajkumar R said...

Very excellent one Madumitha.you are writing 'pudiaya aakananuru'.
Hats off to you and keep it up.

Monday, November 10, 2008 2:45:00 AM  
Blogger மதுமிதா said...

ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது இங்கே எழுதி.

நன்றி ராஜ்குமார்.

Monday, November 10, 2008 5:16:00 AM  
Blogger U.P.Tharsan said...

//காயும் நில‌வும்
காற்றும்கூட‌ த‌கிக்கிற‌து
உன்நினைவினை
அலைய‌லையாய் எழுப்பி//

நல்லாயிருக்கு...

Thursday, February 05, 2009 5:23:00 AM  
Blogger dhananjey said...

அருமை... இன்னும் எழுதுங்கள்!

Tuesday, February 24, 2009 9:12:00 AM  
Blogger மதுமிதா said...

தர்சன், தனஞ்ஜெய் நன்றி

Wednesday, September 02, 2009 7:14:00 AM  
Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Wednesday, April 14, 2010 10:42:00 AM  
Blogger அன்புடன் மலிக்கா said...

நிலைக்கிறது வரிகள் நெஞ்சத்தில் அருமை..

Wednesday, March 16, 2011 12:27:00 AM  
Blogger நந்தினி மருதம் said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்
---------------------------------
நந்தினி மருதம், நியூயார்க, 2012-07-06

Friday, July 06, 2012 7:08:00 PM  
Blogger பாமரன் said...

கவிதை அருமை.

தமிழ்மொழி.வலை


( WWW.THAMIZHMOZHI.NET )

Monday, September 30, 2013 6:21:00 AM  

Post a Comment

<< Home