காதலை வெளிப்படுத்தும் கணம்...
வெளிப்படும் உனது காதல்
வெள்ளைத்தாளில்
பட்டவுடன் பளிச்சிடும்
சிறு வண்ணத்தீற்றலாய்
மனதில் கீறிவிடுகிறது
அழியா சித்திரத்தை
காதலை வெளிப்படுத்தும்
கணந்தோறும்
கனன்றெழும் அன்பு
தகிக்கச்செய்கிறது
தேகம் முழுமையும்
தென்றலின் தேவையை
திகட்டத் திகட்ட வேண்டுவதாய்
அறிந்து அல்லது அறியாது
வெளிப்படும் ஒற்றை வார்த்தை
காதலின் ஒளியைத் தூண்டி
அணையாது காக்கிறது
அணைப்பின் தீவிரம் கோரியபடி
காதல் வெளிப்படும்
அடுத்த கணத்தை வேண்டியபடி...
4 Comments:
// சட்டென அனுமதியின்றி
வெளிப்படும் உனது காதல்
வெள்ளைத்தாளில்
பட்டவுடன் பளிச்சிடும்
சிறு வண்ணத்தீற்றலாய்
மனதில் கீறிவிடுகிறது
அழியா சித்திரத்தை
//
Very good start. Apuram dilute aaki pochi :-)
- PK Sivakumar
காதுக்குக் கேளாத பார்வை மொழி! - கை
விரலுக்குள் அடராமல் எழுத்தும் உளி!
ஏதுக்கும் ஒலிக்காத ஒளியின் மொழி - கை
எழுதாத ஓவிநீ, அழகின் துளி!
கான்சண்ட்ரேட்ட்ட்ட்ட்டடா இருக்குன்னு நினைத்தேன் பிகேஎஸ்.
நன்றி நல்ல விமர்சனம்.
முதல்முறை வந்த முனைவருக்கு வரவேற்பும் நன்றியும் _^_
இதுபோலும் எழுதப் பார்க்கிறேன் இரவா
Post a Comment
<< Home