Saturday, October 13, 2007

நீள்கிறது இரவு...

நீள்கிறது இரவு
நீயின்றி சுடுகிறது தீயாய்

காயும் நில‌வும்
காற்றும்கூட‌ த‌கிக்கிற‌து
உன்நினைவினை
அலைய‌லையாய் எழுப்பி

க‌ட‌லினும் பெரிதோ
ம‌ல‌ரினும் அழ‌கோ
கானினும் அட‌ர்வோ
தேனினும் இனிதோ

தீண்டவேண்டுமெனும்
தீரா விருப்பினை
அள்ளி அள்ளி
அளிக்கும்காத‌ல்

Thursday, October 11, 2007

விழிகள் காத்திருக்கின்றன‌...

வீழ்வேனோ
வேர‌றுந்த‌ ம‌ர‌மாய்
உனைக் காணாது

விழியின் தீண்டலில்
உயிர்க்கும் வாழ்வென‌
விழிகள் காத்திருக்கின்றன‌
உயிரை இறுக‌ப்பற்றி

வாச‌ம‌ல‌ராய் ம‌லர்ந்திருப்போமோ...

வருகிறேன் எனக்கூறி
எங்கேயோ சென்றுவிடுகிறாய்
அவஸ்தையை அறியாது
இதயத்தை வேரோடு பிடுங்கிக்கொண்டு

வரும் சேதியேனும் சொல்வாயோ
வாச‌ம‌ல‌ராய் ம‌லர்ந்திருப்போமோ

வருவாயோ
வருகையில் வாழ்ந்திருப்பேனோ
வாடிய‌ மலராய் மறைந்திருப்பேனோ

Tuesday, October 09, 2007

இரயில் சிநேக‌ம் ...


இனிய சிநேக‌ம்
ஓர் நாளில் காதலாக‌லாம்

இனிய காதலும்
இரயில் சிநேகமாகிடுமோ

உயிரான உறவை...

தேடும் விழிகள் ஓயுமோ
உறவு செல்கையிலும்
உயிர் விலகுகையிலும்

உயிர் பிரிகையிலேனும் காணுமோ
உயிரான உறவை
உறவான உயிரை

Friday, September 28, 2007

விண்ணில் பறக்கச் செய்கிறாய்...

விட்டுச் சென்ற அடுத்தநொடி
நினைவுச் சுழலில் சிக்கித்
தவிக்க நேரிடுகிறது
உயிர் நீங்கும் அவஸ்தையுடன்

வரும்போதே மீட்டெடுத்து
உயிர்க்காற்றைப் ப‌ரிச‌ளித்து
விண்ணில் பறக்கச் செய்கிறாய்
உயிர் காத்ததையும் அறியாது

Wednesday, September 26, 2007

இரவின் நட்சத்திரங்களாய்...





விழிகள் பூத்திருக்கின்றன‌
இரவின் நட்சத்திரங்களாய்

விழித்திருக்கிறாயோ நீ

Thursday, September 20, 2007

காட்டுத்தீயாய்...

காட்டுத்தீயாய்
தகிக்கும் காதலை
காதலைக் கொண்டே
அணைக்கவியலும்

காதல்
காற்றைப் போல

மெய்யானால்
பிரிவில் வளர்த்தெடுக்கும்
காட்டுத்தீயை வளர்ப்பதாய்

இல்லையேல்

அணைத்துவிடும்
மெழுகின் ஒளியை அணைப்பதாய்

மாசா மாசற்றதா...

பிரிவின்
ஒவ்வொரு நொடியிலும்
உரசிப் பார்க்கவியலுமோ
காதலை

உண்மைக் காதலாகுமோ
மாசா மாசற்றதாவென
பொன்னை உரசுவதாய்
உரசிப் பார்த்தால்

சிருங்காரம் சேர்த்து
சிங்காரமாய் அலங்கரித்து வரும்
சில்லெனும் இரவு
காதலை வளர்க்கவே

சலிப்பை கொடுக்கும்
சிறு பிரிவும் கூட

இணைவோ
இன்பம் வளர்க்கும்
நீங்கா இன்பம் சேர்க்கும்

Wednesday, September 12, 2007

உறங்கா உள்ளம்...

உற‌ங்கும் உல‌கு
உறங்கா உள்ளம்
உல‌க‌ நிய‌தி?
காத‌ல் உல‌க‌ நிய‌தி?