Friday, September 28, 2007

விண்ணில் பறக்கச் செய்கிறாய்...

விட்டுச் சென்ற அடுத்தநொடி
நினைவுச் சுழலில் சிக்கித்
தவிக்க நேரிடுகிறது
உயிர் நீங்கும் அவஸ்தையுடன்

வரும்போதே மீட்டெடுத்து
உயிர்க்காற்றைப் ப‌ரிச‌ளித்து
விண்ணில் பறக்கச் செய்கிறாய்
உயிர் காத்ததையும் அறியாது

Wednesday, September 26, 2007

இரவின் நட்சத்திரங்களாய்...





விழிகள் பூத்திருக்கின்றன‌
இரவின் நட்சத்திரங்களாய்

விழித்திருக்கிறாயோ நீ

Thursday, September 20, 2007

காட்டுத்தீயாய்...

காட்டுத்தீயாய்
தகிக்கும் காதலை
காதலைக் கொண்டே
அணைக்கவியலும்

காதல்
காற்றைப் போல

மெய்யானால்
பிரிவில் வளர்த்தெடுக்கும்
காட்டுத்தீயை வளர்ப்பதாய்

இல்லையேல்

அணைத்துவிடும்
மெழுகின் ஒளியை அணைப்பதாய்

மாசா மாசற்றதா...

பிரிவின்
ஒவ்வொரு நொடியிலும்
உரசிப் பார்க்கவியலுமோ
காதலை

உண்மைக் காதலாகுமோ
மாசா மாசற்றதாவென
பொன்னை உரசுவதாய்
உரசிப் பார்த்தால்

சிருங்காரம் சேர்த்து
சிங்காரமாய் அலங்கரித்து வரும்
சில்லெனும் இரவு
காதலை வளர்க்கவே

சலிப்பை கொடுக்கும்
சிறு பிரிவும் கூட

இணைவோ
இன்பம் வளர்க்கும்
நீங்கா இன்பம் சேர்க்கும்

Wednesday, September 12, 2007

உறங்கா உள்ளம்...

உற‌ங்கும் உல‌கு
உறங்கா உள்ளம்
உல‌க‌ நிய‌தி?
காத‌ல் உல‌க‌ நிய‌தி?

Tuesday, September 11, 2007

விரிக்கப்படாத வலையில்...

விழிகளுக்ககப்படாத
விரிக்கப்படாத வலையில்
விழுந்தன இரு பறவைகள்
விழிகள் விரித்தவண்ணம்

வீழச் செய்வதில் விருப்பமோ...

வீழ்ந்ததை அறியாது
விலகுவயோ

விட்டுப் பிரியாதெனை
வீழச் செய்வதில்
விருப்பமோ

Sunday, September 09, 2007

தெவிட்டாத உன் முன்னே...

தென்றலோ தேன்மலரோ
தரத் தவறுகிறது உன் சுவையை
தோல்வியில் தவழ்கிறது
தெவிட்டாத உன் முன்னே

திடீரென தென்படுகிறாய்
நீதானோ
விரைகின்றன விழிகள்
விரிய விரிய
நிலைகொள்கின்றன ஓரிடத்தில்

அடுத்தகணம் இல்லை
அங்கே தென்படவில்லை
அலைபாயும் விழிகள்
ஆறுதல் சொல்லி தேற்றுவாரின்றி

தேடிச் சென்ற மனமோ
திரும்பவில்லை இன்னும்
இறுகப் பற்றிக் கொண்டாயோ
கொள்ளை போனதை

Friday, September 07, 2007

நிரூபணத்திற்கான கேள்விகள்...

என்ன எழுதியும் நிறைவில்லை
எப்படி என்ன வார்த்தையில்
அன்பை வடிக்க இயலும்

ததும்பும் அன்பை
மறைத்தலுக்கான சிரமங்கள்
அன்பினும்
வலிய வலியினைத்தரும்
வல்லமைபெற்றவை

அறியாதவர்கள்
அறிந்து கொள்வதில்லை

கதிரவன் ஒளியை
காகிதத்தால் மறைத்துவிடுதல்போல்
மதியின் அழகை
மேகம் மறைப்பதுபோல்
அன்பை மறைக்கவியலாதென

நினைவிருக்கும்வரை
நிஜம் புரியும்வரை
தொடரும்தான்
நிரூபணத்திற்கான கேள்விகள்
இருப்புக்கான சாத்தியங்கள்
இல்லாததுபோல்

Tuesday, September 04, 2007

மரித்தாலும் மறவேனே......

தேடக்கிடைக்காத திரவியமே

தானாக வந்தேனென

தயை மறந்தனையோ

கை தவறச் செல்தல் தகுமோ


வீணுலகில்

விண்ணுலகாய் வந்த செல்வமே

விடாது பற்றிக்கொண்டே

வியந்த மனதை

விட்டுச் செல்தல் முறையோ


விளையாட்டல்லவே வாழ்க்கை

வீழச்செய்து வேடிக்கை காண்பதோ

விதியோ விதியின் சதியோ

காலத்தின் வேட்கையோ


மறக்க நினைந்து

மந்தகாசப் புன்னகையோ

மறுப்பதான நடிப்போ

மறுப்பாயோ மறப்பாயோ

மறவேனே மறவேனே

மரித்தாலும் மறவேனே